வீடியோ : மைதானத்தில் இருந்து தல தோனிக்கு கோரிக்கை வைத்த சிவகார்த்திகேயன் .!

நேற்று போட்டி தொடங்குவதற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் மைதானத்திற்கு

By murugan | Published: Dec 16, 2019 06:23 AM

  • நேற்று போட்டி தொடங்குவதற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் மைதானத்திற்கு வந்து பேசினார்.
  • "தல தோனி நீங்கள் மறுபடியும் வரவேண்டும்" உங்களுடைய ஹெலிகாப்டர் சிக்ஸர் பார்க்க நாங்க எப்போவும் காத்து கொண்டு இருக்கிறோம்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது ஒருநாள்தொடரில் விளையாடி வருகின்றனர். நேற்று முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி  பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் இறங்கிய இந்திய அணி இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 287 ரன்கள் எடுத்தனர்.பின்னர் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 2 விக்கெட்  இழந்து 291 ரன்களை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குவித்தனர்.ஒரு நாள் போட்டியை காண நடிகர் சிவகார்த்திகேயன் வந்து இருந்தார். நேற்று போட்டி தொடங்குவதற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் மைதானத்திற்கு வந்து பேசினார், அப்போது அவர் "தல தோனி நீங்கள் மறுபடியும் வரவேண்டும்" உங்களுடைய ஹெலிகாப்பிடர்  சிக்ஸர் பார்க்க நாங்க எப்போவும் காத்து கொண்டு இருக்கிறோம். எங்களுக்காக கண்டிப்பாக இந்திய அணிக்கு 5 வருடமாவது விளையாட வேண்டும், அது போதும் எங்களுக்கு’ என கோரிக்கை வைத்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc