80 வயது முதியவர் திடீர் ஜீவசமாதி! சிவபெருமான் கனவில் வந்து கூறியதாக தகவல்!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாசங்கரை எனும் கிராமத்தில் தனது குடும்பத்திரனருடன்

By Fahad | Published: Apr 07 2020 12:23 AM

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாசங்கரை எனும் கிராமத்தில் தனது குடும்பத்திரனருடன் வசித்து வருபவர்  இருளப்பன், இவருக்கு  வயது 80. இவர் நேற்று இரவு 12 மணியில் இருந்து இன்று காலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடைய உள்ளதாக தகவல் வெளியானது இதனால் அங்கு சுமார் 5000 பேர் அந்த ஜீவசமாதியை காண மக்கள் கூடினர். ஜீவசமாதி அடைவது பற்றி இருளப்பன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், ' சிவபெருமான் தன் கனவில் வந்து கூறியதால் இந்த முடிவு எடுத்தார் என கூறப்படுகிறது. இவருக்கு நேற்று இரவு அதிக முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உடல் நிலை சரியில்லாததால் இந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ,மேலும் இருளப்பன் தரப்பில், இன்னும் நிறைவேறாத ஆசைகள் இருப்பதாகவும், அதனை நிறைவேற்றிவிட்டு, அடுத்த பௌர்ணமிக்கு இருளப்பன் ஜீவசமாதி அடைய உள்ளதாக,' தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts