ரோம் நகர புகழ்பெற்ற "ஸ்பானிஷ்" படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் அபராதம்!

இத்தாலி நாட்டில் ரோம் நகரில் இருக்கும் புகழ்பெற்ற சின்னமாக விளங்கும்  "ஸ்பானிஷ்"

By Fahad | Published: Mar 28 2020 12:27 PM

இத்தாலி நாட்டில் ரோம் நகரில் இருக்கும் புகழ்பெற்ற சின்னமாக விளங்கும்  "ஸ்பானிஷ்" படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படவுள்ளது. பாரம்பரிய சின்னங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த கட்டிடங்களை கொண்டது ரோம் நகரம். நாள்தோறும் பல்வேறு சுற்றுலா பயணிகள் அங்கு வருவது வழக்கம். இதனால், அங்கு இருக்கும் பழமை வாய்ந்த சின்னங்களை பாதுகாக்க ரோம் நகர அரசு புதிதாக ஒரு முறையை கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1725 ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்பானிஷ் படிகளில் யாரேனும் அமர்ந்தாலோ அல்லது குப்பைகளை கொட்டினாலோ 400 யூரோ டாலர் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 31 ஆயிரம் ரூபாய் ஆகும். மேலும், இதில் இருக்கும் 174 படிகளில் யாரும் உட்காமல் இருக்க தொடர்ந்து காவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

More News From rome city