கடல் கடந்தும் கடவுளை வணங்கும் தமிழர்கள்..!!சிங்கப்பூரில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷகம்..!!கோலாகலம்..!!

சிங்கப்பூரில் 164 ஆன்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷக விழா வெகு விமர்சையாக நடந்தது.

சிங்கப்பூரின் லீட்டில் இந்தியா பகுதியில் 164 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது இந்த கோயிலை 1978ல் தேசிய சின்னமாக சிங்கப்பூர் அரசு அறிவித்தது கோவிலை 29 கோடி ரூபாய் செலவில் நான்காவது முறையாக சீரமைக்கும் பணி 2016 ஆண்டு துவங்கியது.

உள்ளூர் பக்தர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் தமிழகத்தை சேர்ந்த சிற்ப மற்றும் ஒவியக்கலைஞர்களும் ஈடுபட்டனர்.சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் கும்பாபிஷகம் நடந்தது அப்போது குடங்களில் எடுத்து வரப்பட்ட புனித நீர் ஒன்பது கோபுர கலசங்கள் மற்றும் கருவறையில் தெளிக்கப்பட்டது.

இவ்விழாவில் 40 ஆயிரம் பக்தர்கள் மற்றும் அந்நாட்டு பிரதமர் லீ சீன் லூஸ் உட்பட பிரதமர் அலுவலக அமைச்சர்கள் சான் சுன் சிங் என நான்கு அமைச்சர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment