ஸ்மார்ட் போனில் சிக்கி தவிக்கும் உங்களை காக்கும் புதிய ஆப்ஸ்..!

இன்றைய இளம் தலைமுறையினர் எதில் மாட்டி தவிக்கிறார்களோ இல்லையோ, ஆனால், ஸ்மார்ட் போனில் சிக்கி கொண்டு அவதிப்படுகின்றனர். பல நாட்கள் ஸ்மார்ட் போனுடனே வாழ்ந்த நமக்கு இது இல்லாமல் ஒரு நோடி கூட ஓடாது போல. ஸ்மார்ட் போனில் அடிமையாகி தனது வாழ்க்கையை இழந்தவர்கள் பலர்.

இப்படி மாட்டி தவிக்கும் உங்களை காப்பாற்றவே ஒரு செயலி உள்ளது. இதன் அவுட்லுக்கே சற்று வித்தியாசமாக இருக்கிறது. இதை நீங்கள் டவுன்லோட் செய்து பார்த்தால் மட்டுமே இதன் பயன்கள் உங்களுக்கு புரியும். இனி இந்த செயலியை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கவன சிதறலா?
எப்போதுமே மொபைலில் குடும்பம் நடத்தி கொண்டுள்ளோருக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும். இந்த செயலியின் பெயர் “சியம்போ” (siempo) என்பதாகும். இதன் அவுட்லுக் பார்ப்பதற்கு வெள்ளை கருப்புமாக இருக்கும். மற்ற செயலிகளை விட இது முற்றலிலும் வேறுபட்டிருக்கும்.

தனித்துவம்
இந்த செயலியை பயன்படுத்தி வருவதால் உங்களின் கவனம் மாறுபடும். காரணம், இந்த செயலில் எது எங்கு உள்ளது என்பதே நமக்கு தெரிவதில்லை. எனவே, ஒரு புதிர் போட்டி போலத்தான் இந்த செயலி செயல்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு லான்ச்சர் போல்தான் இது உள்ளது.

சிறப்பானது
இதில் மற்ற செயலிகளை போன்று ஐகான்கள் பளீரென்று இருக்காது. மிகவும் மென்மையான நிறத்தில் உள்ளது. ஆண்ட்ராய்டு, ஐபோன்களுக்கான பயனாளிகள் இந்த செயலை பயன்படுத்தும் வடிவில் இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பான செயலியை நீங்களும் பயன்படுத்தி பாருங்களேன்.

Leave a Comment