தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.  சென்னையை

By venu | Published: Dec 26, 2019 12:41 PM

  • தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. 
  • சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புன்டியில் 6 செ.மீ மழையும், திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் நன்னிலத்தில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸும் பதிவாகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
Step2: Place in ads Display sections

unicc