நாளை காலை 9 மணிக்கு சிறிய வீடியோ செய்தி – பிரதமர் மோடி ட்வீட்.!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்து வீடியோ மூலம் கூறி வருகிறார். அந்த வகையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவும் வீடியோ மூலம் தான் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து கொரோனா குறித்த பல்வேறு செய்திகளை வீடியோ மூலம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில் நாளை காலை 9 மணிக்கு வீடியோ மூலம் ஒரு சிறிய செய்தியை சக இந்தியர்களுக்கு வெளியிட போவதாக குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்