ஊரடங்கு உத்தரவை மீறினால் சுடப்படுவார்கள்! பிலிப்பைன்ஸ் அதிபர்அதிரடி !

ஊரடங்கு உத்தரவை மீறினால் சுடப்படுவார்கள்! பிலிப்பைன்ஸ் அதிபர்அதிரடி !

முதலில் சீனாவை அச்சுறுத்திய கொரோனா  நோயானது, அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனையடுத்து, இந்த நோய் மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. உலக அளவில் 9,35,197 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 47 ஆயிரத்து 192 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

 இந்நிலையில், பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ, ஊரடங்கு உத்தரவு குறித்து கடுமையான சட்டம் இயற்றியுள்ளார். ஊரடங்கு உத்தரவை சரியாக கடைபிடிக்குமாறும், விதிமுறைகளை மீறி ஒன்றுகூடுவோர் மற்றும் வைரஸ் பரவலுக்கு காரணாமாக இருப்பவர்களையும் சுட்டு தள்ளுவதற்கு காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். 

அங்கு போராட்டத்தில் ஈடுபாட்ட மக்கள் போலீசார் மற்றும் மருத்துவர்களிடம்  கொண்டதாக கூறியுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸால் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள  நிலையில், 2,000-க்கும் மேற்பட்டோர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube