அதிர்ச்சி செய்தி.! இனி இந்த போன்களில் Whatsapp-யை பயன்படுத்த முடியாது..!

2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான மொபைல் போன்களில்

By balakaliyamoorthy | Published: Dec 11, 2019 05:34 PM

  • 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான மொபைல் போன்களில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாது.
  • இதனிடையே அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் பல நாடுகளில் வாட்ஸ்ஆப் செயலி முடங்கி உள்ளதாக தகவல்.
கடந்த நாட்களாக வாட்ஸ்ஆப் பற்றி புதிய அப்டேட் வந்த வன்னேமே இருந்தது. தற்போது வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான மொபைல் போன்களில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது என அறிவித்த அதன் உரிமையாளரான ஃபேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள் 2.3.7 அல்லது அதைவிடவும் பழைமையான ஆன்டிராய்டு மென்பொருளில் இயங்கும் அனைத்து போன்களிலும் வாட்ஸ்ஆப் இயங்காது. அதே போன்று வின்டோஸ் போன்களிலும்  வரும் 31-ம் தேதிக்குப் பிறகு வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த முடியாது. இதுபோன்ற போன்களை வைத்துள்ளவர்களால் புதிய வாட்ஸ்ஆப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் பல நாடுகளில் வாட்ஸ்ஆப் செயலி முடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
Step2: Place in ads Display sections

unicc