‘ நானும் ரெடி – அவரும் ரெடி’ – தளபதி விஜயுடன் இணைவது குறித்து இயக்குனர் ஷங்கர் ருசிகர தகவல்!

  • ஷங்கர் இயக்கத்தில் விஜய் நண்பன் படத்தில் நடித்து இருந்தார். 
  • விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
  • இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன்-2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இப்படம் வருகிற கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது.

இதேபோல இயக்குனர் ஷங்கரும் உலக நாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன்2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். சூட்டிங் விரைவாக நடைபெற்று வருகிறது. 2021-இல் தான இப்படம் வெளியாகும்  என கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் சங்கர் அண்மையில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசும்போது, தளபதி விஜயுடன் எப்போது அடுத்து படம் பண்ண போகிறீர்கள் என கேட்டனர். அதற்கு அவர்,’ நானும் ரெடி தான். அவரும் ரெடிதான். விரைவில் நடக்கலாம்’ என்பது போல தனது பேச்சை முடித்தார். இதனால் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் உள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.