அபுதாபியில் அக்டோபர் 1 புதிய போக்குவரத்து விதிமுறைகள்.!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியில் புதிய போக்குவரத்து  விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, போக்குவரத்து மாற்றுப்பாதையில் ஏற்படக்கூடிய எந்தவொரு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு போக்குவரத்து துறையிடம் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது .

மேலும், அகழ்வாராய்ச்சிகள் ஏதெனும் மேற்கொள்ளும்போது சரியான தடைகள் அமைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், அதில் பணிபுரியும் நபர்கள் வாகன போக்குவரத்தை தடுக்கக்கூடாது. பணியிடத்தில் ஒரு பாதுகாப்பு அதிகாரி இருக்க வேண்டும், அதில் சைக்கிள் ஓட்டும் பாதைகளும் இருக்க வேண்டும். இது குறித்து, அக்டோபர் 1 ஆம் தேதி அபுதாபி நகரில் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.