குலுக்கல் முறையில் அன்னவாசல் ஒன்றியத்தை கைப்பற்றிய அதிமுக .!

குலுக்கல் முறையில் அன்னவாசல் ஒன்றியத்தை கைப்பற்றிய அதிமுக .!

  • தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு 5 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
  • அன்னவாசல் ஒன்றியத்தில் குலுக்கல் முறையில் அதிமுக சார்பில்  போட்டியிட்ட ராமசாமி வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு 5 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் நடைபெற்றது. அன்னவாசல் ஒன்றியத்தில் திமுக -10, காங்கிரஸ் -1 மற்றும் அதிமுக – 9 இடங்களை கைப்பற்றி இருந்தது.

இதைத்தொடர்ந்து இந்த தேர்தலில் திமுக சார்பில் ஜெயலட்சுமியும் , அதிமுக சார்பில் ராமசாமி என்பவரும் ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிட்டு இருந்தனர். இதில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர் அவைக்கு வராததால் ஜெயலட்சுமிக்கு 10 வாக்குகளும் ,  ராமசாமிக்கு 9 வாக்குகளும் பெற்றனர்.

இந்நிலையில் அதில் திமுக சார்பில் போடப்பட்ட 10 வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் சமமாக இருந்தனர் .இதனால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். பின்னர் நடந்த குலுக்கல் முறையில் ராமசாமி வெற்றி பெற்றார்.

author avatar
murugan
Join our channel google news Youtube