நேற்றைய போட்டி மூலம் முதல் இடத்தை தட்டி பறித்த ஷாகிப்-அல்-ஹசன்!

நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் அணி மோதியது.இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீசியது.
முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் 47 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து  200 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் ஆல் ரவுண்டரான ஷாகிப்-அல்-ஹசன் 5 விக்கெட்டை பறித்து சாதனை படைத்து உள்ளார்.ஷாகிப்-அல்-ஹசன் ஆப்கானிஸ்தான் எதிரான நேற்றைய போட்டியில் 10 ஓவர் வீசி 29 ரன்கள் கொடுத்து  5 விக்கெட்டையும் பறித்தார்.
மேலும் அவர் வீசி பத்து ஓவரில் ஒரு ஓவர் மெய்டன் செய்தார்.இந்நிலையில் உலகக்கோப்பையில் பங்களாதேஷ் அணி பந்து வீச்சாளர்களில் முதன் முறையாக ஐந்து விக்கெட்டை பறித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
5-29 ஷாகிப்-அல்-ஹசன்  ஆப்கானிஸ்தான் (2019)
4-21 ஷபியுல் இஸ்லாம்  அயர்லாந்து (2011)
4-38 மஷ்ரஃப் மோர்டாசா  இந்தியா (2007)
4-53 ரூபல் ஹொசைன்  இங்கிலாந்து (2015)

author avatar
murugan