ஷகீலா படத்திற்கு வந்த 'திடீர்' சோதனை!

ஷகீலா படத்திற்கு வந்த 'திடீர்' சோதனை!

  • ஷகீலா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் 'லேடீஸ் நாட் அலவ்டு' ( Ladies not allowed )
  • இந்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது. சென்சார் சான்று இன்னும் இப்படத்திற்கு கிடைக்கவில்லை.
  • எங்களது படத்திற்கு தொடர்ந்து இதேபோல பிரச்சனை ஏற்படுகிறது என ஷகீலா அண்மையில் ஓர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மலையாள சினி உலகில் முன்னணி ஹீரோக்களுக்கு எந்த அளவிற்கு மார்க்கெட் இருக்குமோ அந்த அளவிற்கு மார்க்கெட் உள்ள நடிகை ஷகீலா. இவரது படங்களுக்கு வரவேற்பு அதிமுகமாகவே இருக்கும். இவர் அடுத்து எடுத்துள்ள புதிய படம் 'லேடீஸ் நாட் அலவ்டு' ( Ladies not allowed ) இந்த படம் அதிக அடல்ட் கருத்து இருப்பதாகக கூறி சென்சார் குழு சான்று வழங்க மறுத்து வந்துள்ளது. இது குறித்து அப்படத்தின் நடிகை ஷகீலா கூறுகையில், ' மற்ற அடல்ட் காமெடி படங்களுக்கெல்லாம் எந்தவித பிரச்னையும் இன்றி சென்சார் போர்டு சான்று வழங்கி திரையிட அனுமதித்து விடுகிறது. ஆனால் 'லேடீஸ் நாட் அலவ்டு' ( Ladies not allowed ) படத்தை மட்டும் ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கின்றனர். நாங்கள் படம் எடுக்கும்போதே இது அடல்ட் காமெடி படம் என்று சொல்லித்தான் எடுக்கிறோம். இப்படத்திற்க்காக பலரும் கஷ்டப்பட்டுள்ளனர். கடன் வாங்கித்தான் படத்தை எடுத்துள்ளோம். இந்த படத்திற்கு மட்டுமல்ல எங்களது மற்ற சில படங்களுக்கும் இதே பிரச்சனைகள் தான் வருகிறது. சில சென்சார் போர்டு அதிகாரிகள் படத்தை வெளியிட லஞ்சம் கேட்பதாகவும் தகவல் வெளிவருகிறது' எனவும் தனது கருத்தை அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை ஷகீலா கூறியுள்ளார்.