தாயை இழந்த குழந்தையை தத்தெடுத்து ரியல் ஹீரோவான ஷாருக்கான்.!

தாயை இழந்த குழந்தையை தத்தெடுத்து ரியல் ஹீரோவான ஷாருக்கான்.!

ரயில் நிலையத்தில் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தையை தனது டிரஸ்ட் மூலம் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தத்தெடுத்துள்ளார்.

சமீபத்தில் தாய் இறந்தது அறியாமல் அவரை எழுப்பும் 2வயது குழந்தையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. ஆம் குஜராத் மாநிலத்திலிருந்து பீகாரிலுள்ள மோசாபூருக்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளியான பெண்மணி ஒருவர் பசியின் காரணமாக உயிரிழந்தார். அதனை அறியாத அந்த பெண்ணின் 2வயது குழந்தை உடம்பில் மூடப்பட்டிருந்தன போர்வையை மாற்றி, தன்னுடைய அம்மாவை எழுப்ப முயற்சித்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. பார்ப்பவர்களின் மனதை உருக்குய இந்த சம்பவம் மற்றும் வீடியோவை கண்ட பிரபல நடிகரான ஷாருக்கான், தான் நடத்தும் "மீர் பவுண்டேஷன்" அந்த குழந்தையை தத்தெடுத்துள்ளது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் இந்த குழந்தையை என்னிடம் அனுப்பி வைத்தவர்களுக்கு நன்றி என்றும், துரதிர்ஷ்டவசமாக இறந்த பெற்றோரின் இழப்பை தாங்கி கொள்ளும் மனவலிமையை குழந்தைக்கு இறைவன் அளிக்க பிரார்த்திப்போம் என்றும், அந்த வலி எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும் என்றும், நமது அன்பும், ஆதரவும் அந்த குழந்தைக்கு வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஷாருக்கானின் இந்த நற்செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.

Latest Posts

முட்டை விலை 15 காசுகள் குறைந்து 4.75 க்கு விற்பனை...!
#IPL 2020: KKR கனவை தடுக்குமா CSK...?
தொடங்கியது பருவமழை! தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்!
யாரை வாழ்க்கையில மிஸ் பண்றீங்க .... கண்கலங்கும் போட்டியாளர்கள்!
இந்தியாவில் நேற்று கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
பிரேசில் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
முதல்முறையாக நீரில் மிதக்கும் விமானம்சேவை அசத்திய ஸ்பைஸ்ஜட்
தமிழக முழுவதும் அரசு அலுவலங்களில் அதிரடி சோதனை..சிக்கிய ₹7லட்சம்...அதிர்ச்சி அதிகாரிகள்
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனாத் தொற்று