கொரோனா நோயாளிகளுக்காக ஷாருக்கான் செய்த உதவி.! குவியும் பாராட்டுகள்.!

கொரோனா நோயாளிகளுக்காக ஷாருக்கான் செய்த உதவி.! குவியும் பாராட்டுகள்.!

பாலிவுட் நடிகரான ஷாருக்கான் கொரோனா நோயாளிகளுக்காக தனது அலுவலகத்தை ஐசியு – ஆக மாற்றியுள்ளார்.

பாலிவுட் திரையுலகின் கிங் ஆப் ரொமான்ஸ் ஷாருக்கான் தான். பல ஹிட் படங்களை தனது நடிப்பினால் ரசிகர்களுக்கு கொடுத்தவர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஜீரோ. நடிப்பில் சிறந்து விளங்குவது மட்டுமில்லாமல் பலருக்கு உதவியும் வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலருக்கு உதவிய ஷாருக்கான், சமீபத்தில் தனது அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையாக பம்பாய் முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு வழங்கினார்.

அதில் 66 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 54 பேர் மீட்கப்பட்டனர். அதனையடுத்து அந்த இடத்தை ஐ. சி. யு-வாக மாற்ற இருந்ததால் மீதமுள்ள 12 நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். ICU-ஆக மாற்றுவதற்கான பணிகள் ஜூலை முதல் தொடங்கப்பட்ட நிலையில் எஸ். ஆர். கே-வின் மீர் அறக்கட்டளை, இந்துஜா மருத்துவமனை மற்றும் பி. எம். சி ஆகியவற்றுடன் இணைந்து இணைந்து 15 படுக்கைகளுடன் கூடி நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்தது. மேலும் இந்த மருத்துவமனையில் வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் இயந்திரங்கள் என பல வசதிகளை கொண்டுள்ளது. தற்போது ஷாருக்கானின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Join our channel google news Youtube