கொரோனாவின் இரண்டாம் அலை – மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்!

கொரோனாவின் இரண்டாம் அலை எழுந்துள்ளதால், மீண்டும் முழு ஊரடங்கை பிரான்ஸ் நிர்வாகம் அமல்படுத்தியது.

சீனாவிலிருந்து உலகம் முழுவதிலும் வேகமாக பரவி லட்சக்கணக்கான உயிர்களை பறித்த கொடூரமான உயிர்கொல்லி வைரஸ் தான் கொரானா வைரஸ். இது பரவ ஆரம்பித்த சில மாதங்களில் காட்டுத்தீ போல பரவியது மட்டுமல்லாமல் பல உயிர்களையும் கொண்டு சென்றது. அதன்பின் ஊரடங்கு கட்டுப்பாடு உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து சற்றே இதன் தாக்கமும் வீரியமும் குறைந்து என்று கூறலாம். தற்பொழுது இந்த கொரானா வைரஸ் தடுப்பு மருந்து கண்டு பிடிக்க கூடிய முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பறவையா ஆரம்ப காலகட்டத்தில் ஊரடங்கை அறிவித்த பிரான்ஸ் அரசு மக்களின் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கு தளர்வுகளை அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் இரண்டாவது முறையாக முழு ஊரடங்கை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அவர்கள் பிறப்பித்துள்ளார். இந்த முழு ஊரடங்கு பிரான்சில் நாளை (அக்டோபர் 30) முதல் டிசம்பர் மாதம் வரையிலும் அமலில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
author avatar
Rebekal