#டிக்டாக் தடை-கடுப்பில் சீனா..!நடவடிக்கை உறுதி-மிரட்டல்!

அமெரிக்காவில் டிக்டாக் மற்றும் வீ சாட்டை செயலிகளுக்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப்  தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தடைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமின்றி எதிர் நடவடிக்கை எடுக்கவும் தயார் என்று பகீரங்கமாக அறிவித்துள்ளது.

அண்மையில் தான் டிக் டாக் செயலி  உட்பட 106 சீன செயலிகள் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது.அதே போல் அமெரிக்காவிலும் டிக்டாக் மற்றும் வீ சாட்டை தடை செய்ய கோரிக்கை எழுந்த நிலையில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட ஆயுத்தமாக உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம்  தெரிவித்துள்ளது.இது குறித்து சீனா தரப்பில் தெரிவித்துள்ள கண்டனத்தில் அமெரிக்காவின் இந்த தடை நடவடிக்கையை சீனா உறுதியாக எதிர்க்கிறது சீன நிறுவனங்களின் நலனை பாதுகாக்க நாங்கள்  எதிர் நடவடிக்கைகளை எடுக்கவும்  தயார் என்று அமெரிக்காவிற்கு மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

author avatar
kavitha