பிலிப்பைன்சின் மிண்டியானோ தீவில் கடுமையான நிலநடுக்கம்...!!

பிலிப்பைன்சின் மிண்டியானோ தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து

By Dinasuvadu desk | Published: Dec 29, 2018 03:55 PM

பிலிப்பைன்சின் மிண்டியானோ தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டியானோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 3ஆக பதிவான நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின. பூமிக்கடியில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் நிபுணர்கள் தெரிவித்தனர். சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.நிலநடுக்கத்தை தொடர்ந்து பசுபிக் கடற்பகுதியில் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய கடற்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
Step2: Place in ads Display sections

unicc