நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சார்ந்த 4 சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி!

மெக்சிகோவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள பியூப்லா மாகாணத்தில் உள்ள சாண்டோ

By murugan | Published: Jul 13, 2019 04:44 PM

மெக்சிகோவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள பியூப்லா மாகாணத்தில் உள்ள சாண்டோ டோமஸ் சவுத்லா நகரில் நேற்று முன்தினம் கன மழை கொட்டி தீர்த்தது.இதனால் அங்கு உள்ள ஒரு ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் கனமழை காரணமாக அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவில் மண் மற்றும் பாறைகள் விழுந்ததில் ஒரு வீடு மண்ணோடு மண்ணாக மண்ணில் புதைந்தது.வீட்டில் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தனர்.இந்த சம்பவத்தில் மேலும் 2 சிறுவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc