நிபுணர் குழுவை அனுப்புங்கள் – நாராயணசாமி கடிதம்

ஊரடங்கால் மாநில அரசுகள் இழந்த பொருளாதாரத்தை மத்திய அரசுதான் ஈடுகட்ட வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் கடிதம். 

கொரோனா என்ற கொடிய நோயால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை மேம்படுத்த மாநிலங்களுக்கு உடனடியாக நிபுணர் குழுவை அனுப்பக்கோரி மத்திய அரசுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மாநிலங்களில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து உதவ வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கால் மாநில அரசுகள் இழந்த பொருளாதாரத்தை மத்திய அரசுதான் ஈடுகட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, கொரோனவால் அமல்படுத்தப்பட ஊரடங்கு காலத்தில் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் நாடு கடும் பொருளாதார சரிவை கண்டுள்ளது. அந்தவகையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு அமைத்தது தமிழக அரசு. இதற்காக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்