குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை ! வெளியான அறிவிப்பு

இன்று முதல் ஒரு  கிலோ வெங்காயத்தின் விலை ரூ.30 மற்றும் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த

By venu | Published: Nov 08, 2019 08:07 PM

இன்று முதல் ஒரு  கிலோ வெங்காயத்தின் விலை ரூ.30 மற்றும் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக மழை நீடித்து வந்த நிலையில் வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்தது.இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் இன்று முதல் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று  அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ் அறிவித்துள்ளனர்.வெளிச்சந்தை விலையை விட குறைவாக கிலோ ரூ.30 மற்றும் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரசின் நடவடிக்கைகளால் வெங்காய விலை உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
Step2: Place in ads Display sections

unicc