இந்தி மொழியில் தேர்வு என்பது இந்தி தெரியாதவர்களின் வேலை வாய்ப்பை தடுக்கும்-மு.க.ஸ்டாலின் அறிக்கை

இந்தி மொழியில் தேர்வு என்பது இந்தி தெரியாதவர்களின் வேலை வாய்ப்பை தடுக்கும்-மு.க.ஸ்டாலின் அறிக்கை

தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்று  மத்திய அரசு  அறிக்கை வெளியிட்டது.இந்த நிலையில் மத்திய அரசின் அறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில், சுற்றறிக்கையை தபால் துறை உடனடியாக திரும்பப் பெற்று, அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்டிருக்கும் மொழிகளின் சமத்துவத்தைப் போற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் வேலை வாய்ப்பில்லாமல் பல இளைஞர்கள் இருக்கும் போது இந்தி மொழியில் தேர்வு என்பது இந்தி தெரியாதவர்களின் வேலை வாய்ப்பை தடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube