சேவாக் உறவினர் கொலை..! குற்றவாளியை பிடித்து தருவோருக்கு ரூ .50,000 வெகுமதி..!

இந்த வருடம் தொடக்கத்தில் பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தபோது தர்ஷன் தபாஸ்( ​​42) என்பவர்  முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையாவை கொல்ல முயன்றார் என போலீசார் தெரிவித்தனர்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையாவைக் கொல்ல ஒரு சுமார் 25-26 நாட்கள் பெகுசாரையில் தபாஸ் தங்கியிருந்ததாக கூறினார். பெகுசராய் மக்களவைத் தொகுதியில் சாலை நிகழ்ச்சிகளுக்கு கன்ஹையா வந்த போது கன்ஹையாவை கொல்ல  சில முயற்சிகளை மேற்கொண்டார் ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
பெகுசராய் மக்களவைத் தொகுதியில் கன்ஹையா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு பாஜக கட்சியின் கிரிராஜ் சிங்கிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் உள்ள துவாரகா-நஜாப்கர் சாலையில் ஒரு குற்றப்பிரிவுக் குழு தபாஸை பிடிக்க  திட்டம் திட்டினார். இரவு 11 மணியளவில் தபாஸ் ஒரு ஹோண்டா இருசக்கர வாகனத்தில் வந்து உள்ளார். அப்போது அவரை சரணடையும்படி கேட்டுக்கொண்டோம்.
ஆனால் அவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பி ஓட முயன்றார்.அப்போது எங்கள் வாகனங்களுடன் அவரது வழியைத் தடுத்தோம். அவர் எங்களை நோக்கி துப்பாக்கியால்  இரண்டு தோட்டாகளால் சுட்டார். நாங்கள் தற்காப்புக்காக எங்கள் பக்கத்தில் இருந்து நான்கு தோட்டாகளால் சுட்டோம்.ஆனால் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை என அதிகாரி கூறினார்.
தபாஸை பிடித்து தருவோருக்கு ரூ .50 ஆயிரம் வெகுமதி என அறிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டு கொலை வழக்குகளில் காவல்துறையினர் அவரை தேடிவருகின்றனர்.இதில் 2008-ம் ஆண்டு இந்திய அணியின்  முன்னாள் பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாகின் உறவினர் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan