இன்று காஷ்மீர்! நாளை தமிழ்நாடு! காஷ்மீர் பிரிவு குறித்து சீமான் ஆவேசம்!

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்பட்டு, அம்மாநிலம் இரண்டு

By manikandan | Published: Aug 08, 2019 12:41 PM

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா  நிறைவேற்றப்பட்டது. இதற்கு பலர் கண்டனங்களும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலம் விமான நிலையத்தில் பேட்டியளித்த போது, ' இன்று காஷ்மீருக்கு ஏற்பட்ட அதே நிலைமைதான் நாளை தமிழகத்திற்கும். காஷ்மீர் பிரிக்கப்பட்டு மசோதா நிறைவேற்றியவுடன் தொழில் மாநாடு நடத்தப்பட உள்ளதையும் சுட்டிக்காட்டி பேசினார். இந்த நடவடிக்கை மூலம், காஷ்மீரில் வடமாநிலத்தவரை குடியமர்த்துவதே மத்திய அரசின் திட்டம். ' என தனது கருத்தை தெரிவித்தார்.
Step2: Place in ads Display sections

unicc