இரண்டு நாட்களில் இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் : இலங்கை ராணுவ அமைச்சர்

இலங்கை, கொழும்பு தலைநகரில் மக்கள் அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.  தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளிலும் குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் அந்நாட்டு மக்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டில் இருந்து அந்த நாட்டிற்கு சுற்றுலா வந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை இராணுவ அமைச்சர் ருவான் விஜேவர்தனே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போதுபேசிய அவர், ” இரண்டு குழுக்களாக பிரிந்து பயங்கரவாத அமைப்புகளாக செயல்படுவது மற்றும் குழுவின் தலைவர் இந்த தாக்குதலின் போது மனித வெடிகுண்டாக உயிரிழந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்றும், 2 நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் உறுதிப்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment