சிவசேனாவுக்கு இரண்டாவது விஜயதசமி வாக்கு எண்ணிக்கை நாள் -உத்தவ் தாக்கரே..!

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் சிவசேனா கட்சி  சார்பில் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டது.

By murugan | Published: Oct 09, 2019 02:44 PM

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் சிவசேனா கட்சி  சார்பில் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அக்கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகனும் ஒர்லி தொகுதியின் வேட்பாளருமான ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டனர். அப்போது பேசிய உத்தவ் தாக்கரே, இந்தியாவை விரும்பும் இஸ்லாமியர்களின் உரிமைகளுக்கு போராடுவோம்.ராமர் கோவில் கட்டுவதற்கு வகை செய்யும் சட்டம் இயற்ற வேண்டும். தேர்தல் ஆதாயங்களுக்காக ராமர் கோயில் விவகாரத்தை  நான் பேசவில்லை. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு சாதகமாக தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். சிவசேனாவுக்கு இரண்டாவது விஜயதசமி வாக்கு எண்ணிக்கை நாளான 24-ம் தேதி என உத்தவ் தாக்கரே கூறினார். மகாராஷ்டிரா சட்டசபைக்கு வருகின்ற 21-ந் தேதி தேர்தல்  நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc