தமிழகத்தில் இரண்டாவது கொரோனா ஆய்வகம் அமைக்க .. மத்திய அரசு அனுமதி..

காஞ்சிபுரத்தைச் சார்ந்த பொறியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்ட

By murugan | Published: Mar 09, 2020 11:33 AM

காஞ்சிபுரத்தைச் சார்ந்த பொறியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவரை சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தனி வார்டில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கிண்டியில் கொரோனா ஆய்வகம் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா ஆய்வகம் அமைக்க அனுமதி கொடுத்துள்ளது.

நேற்று நமது  தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில கொரோனா வைரசால் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் இத்தாலியில் இருந்து திரும்பியவர்கள்.இந்தியா முழுவதும் 39 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Step2: Place in ads Display sections

unicc