தடுப்பூசியில் நல்ல முன்னேற்றம் அடுத்து 300 பேருக்கு பரிசோதிக்க முடிவு - இங்கிலாந்து விஞ்ஞானிகள்.

கொரோனா என்னும் கொடூரனை விரட்ட உலகமே போராடிக்கொண்டு இருக்கிறது

By manikandan | Published: Aug 01, 2020 02:53 PM

கொரோனா என்னும் கொடூரனை விரட்ட உலகமே போராடிக்கொண்டு இருக்கிறது .இதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் ,மருத்துவர்கள் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றனர் .சமமீபத்தில் ஆக்ஸ்போர்ட்  பல்கலைக்கழகம்  கண்டுபிடித்த மருந்து எதிர்பார்த்த பலனை தந்துள்ளதாக அறிவித்தது .இந்தியாவில் கோவாக்சின் என்ற தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது .

இந்நிலையில் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் விஞ்ஞானிகள் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர் .அதில் தாங்கள் கண்டுபிடித்துள்ள  தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர் .

ஆரம்ப காலக்கட்டத்தில்  குறைந்த அளவிலேயே தடுப்பூசியை பரிசோதிக்கபட்டதாகவும் தற்பொழுது இது சுமார் 300 பேருக்கு இந்த பரிசோதனையை விரிவுபடுத்துவதாகவும் கல்லூரியின் பேராசிரியரான டாக்டர் ராபின் ஷாடோக் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் .

இந்த தடுப்பூசியால் எந்த வித பக்க விளைவுகளும் இல்லை என்றும் அக்டோபரில் பல ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதைத் தொடங்க போதுமான பாதுகாப்புத் தரவு இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.பிரிட்டனில் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் வியத்தகு அளவில் குறைந்துவிட்டதால், தடுப்பூசி செயல்படுகிறதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது கடினம் என்பதால் வேறு இடங்களில் பரிசோதிக்க ஆலோசனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார் .

Step2: Place in ads Display sections

unicc