ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

ஒரு மாணவர் கூட இல்லாமல் இயங்கும் 46 பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக செயல்படும்

By dinesh | Published: Aug 11, 2019 08:00 AM

ஒரு மாணவர் கூட இல்லாமல் இயங்கும் 46 பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக செயல்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் 46 அரசு பள்ளிகள் பள்ளிகள் மூடப்படும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று இது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர் எண்ணிக்கை இல்லாமல் இருக்கும் பள்ளிகள் எக்காரணம் கொண்டும் மூடப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார். 46 அரசு பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக செயல்படும் என்றும் மாணவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சேர்ந்தவுடன் மீண்டும் பள்ளிகள் செயல்பட துவங்கும் என்றும் சமசீர் தெரிவித்துள்ளார்.  
Step2: Place in ads Display sections

unicc