#கவனத்திற்கு-செப்.,21பள்ளிகள் திறக்கப்படாது??! அரசுகள் அறிவிப்பு

#கவனத்திற்கு-செப்.,21பள்ளிகள் திறக்கப்படாது??! அரசுகள் அறிவிப்பு

மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, ஆந்திரா மற்றும் அசாமில் நாளை மறுநாள்(செப்.,21) பள்ளிகளை திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், 4காம் கட்ட தளர்வுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதில் நாளை மறுநாள் முதல், பள்ளிகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. என்றாலும் மாநில அரசுகள், இது குறித்து முடிவு எடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் பள்ளிகளை திறக்க, அனுமதி அளித்திருந்தாலும், சில கட்டுப்பாடுகளையும் உடன் விதித்துள்ளது. அதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பது, கிருமி நாசினி பயன்படுத்துவது, முக கவசம் அணிவது, 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் தொடங்குவது  உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அசாமில்  நாளை மறுநாள்  பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்து உள்ளது. இதன் முதற்கட்டமாக, அடுத்த 15 நாட்களுக்கு, 9 வகுப்பு முதல், +2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், வகுப்புகளை  நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதே போல் ஆந்திராவிலும், கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் பகுதிகளுக்கு வெளியே இயங்கும், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல் ஹரியானாவிலும், பள்ளிகள் திறக்க வாய்ப்பிலை என்று தெரிவித்த போதும் ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு, பாடங்களில் சந்தேகம் இருந்தால், தங்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில், இரண்டு அரசு பள்ளிகள், சோதனை முறையில் ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டது.டில்லியில், அக்டோபர், 5ம் தேதி வரை, பள்ளிகள் இயங்காது என்று அம்மாநில அரசு நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அவ்வாறே குஜராத், உத்தர பிரதேசம், கேரளா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும், நாளை மறுநாள், பள்ளிகள் திறக்கப்படாது என்று, அந்தந்த மாநில அரசுகள்  தெரிவித்துஉள்ளது.

Latest Posts

#IPL2020: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்..!
#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..!
கிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி!
வாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு..!
"பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்" தமிழில் பேசி அசத்தும் தாஹிர்!
முதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.!
பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.!
சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..!