ஆர்.எஸ் பாரதி ஜமீனுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு – உயர்நீதிமன்றம்.!

ஆர்.எஸ் பாரதி முன் ஜமீனுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திமுக அமைப்பு செயலாளர் ஆர.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல்துறை தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. கடந்த 23 ஆம் தேதி நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை சென்னையில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டார்.

மேலும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதையயடுத்து, ஆர்.எஸ்.பாரதியை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தபட்டு இருதரப்பு வாதங்களையும் கேட்டு, ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரிய மனு மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நிலையில், ஆர்.எஸ் பாரதி ஜமீனுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்