காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து !உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து   உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

கடந்த சில காஷ்மீர் விவாகரம் சூடு பிடித்து வருகிறது.முதலில் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.அதில்,காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.ஆனால் அவர் அறிவித்தபோதே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களையில் இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதனையடுத்து மக்களவையிலும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு விட்டது.மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்ட மசோதாவிற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் தெரிவித்து விட்டார்.

 

இந்த நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தேசிய மாநாட்டு கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்சியின் நிர்வாகிகளான அக்பர் லோன்,ஹஸ்நைன் மசூடி ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.ஏற்கனவே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லி வழக்கறிஞர் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.