வறண்டு போன சென்னை புழல் ஏரி ! செயற்கைக்கோள் புகைப்படம் வெளியீடு !

வரலாறு காணாத வறட்சியினால் முற்றிலும் வறண்டு போகியுள்ள சென்னை புழல் ஏரியின் செயற்கைகோள் புகைப்படமானது வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் இந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒப்பிடும் பொது புழல் ஏரியின் வறட்சி தெளிவாக தெரிகிறது.

தமிழகம் முழுவதும் பருவமழை பெய்யாததாலும் வாட்டி வதைக்கும் வெயிலாலும் கடும் வறட்சி உருவாக்கி உள்ளது. சென்னையில் குடிநீர் ஆதரமாக விளங்கும் பெய்யாத சூழலில் முக்கியமான எரிகளான புழல் , சோழவரம், செம்பரம்பாக்கம். ஆகியன முற்றிலும் வரண்டு போய்விட்டன. புழல் ஏரியில் நீரின் அளவு கடந்த ஆண்டு 1393 மில்லியன் கன அடி நீர் இருந்த நிலையில் இந்த ஆண்டு வெறும் 2 கன அடி மட்டுமே இருக்கிறது.
இதே போல் செம்பரம்பாக்கம் எரியும் வறண்டு போயுள்ளதாகவும் இதனால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப்படும் என்று அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.