சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்வுடன் புகைப்படம் எடுத்த சசிகுமார் …!நான் நான் ரசிக்கும்,நேசிக்கும் ரஜினி சார்…!சசிகுமார் நெகிழ்ச்சி

நடிகர் சசிகுமார்  ரஜினிகாந்த்வுடன் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில், விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ரஜினியை வைத்து, முள்ளும் மலரும் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மகேந்திரன், விஜய்யின் தெறி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சமீபத்ததில் மகேந்திரன்  ரஜினியுடன் பேட்ட படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் சசிகுமார் பேட்ட படத்தின் படக்குழுவுடன் இணைத்த நிலையில் ரஜினிகாந்த்வுடன் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் நான் நான் ரசிக்கும்,நேசிக்கும் ரஜினி சார் என்றும் உங்களுடன் பணிபுரிவது எனக்கு நல்ல  நேரம் என்றும் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் சமீபத்தில்  நடிகர் ரஜினிகாந்த்  புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்தார்.

ரஜினியுடன் த்ரிஷாவும் இணைந்து கோயிலுக்கு சென்றுள்ளார்.ரஜினியுடன் கோயிலுக்கு சென்று வந்ததை, மனித உருவில் இருக்கும் இறைவனுடன் சேர்ந்து இறைவனை வணங்கி வந்ததாக த்ரிஷா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Comment