சசிகலா வீட்டை இடிக்க உத்தரவு தஞ்சையில் பரபரப்பு

சசிகலா வீட்டை இடிக்க உத்தரவு தஞ்சையில் பரபரப்பு

தஞ்சையில் உள்ள சசிகலா வீட்டை இடிக்க உத்தரவு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை .

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவுக்கு, தஞ்சையில் மானம்புச்சாவடி எஸ்.பி.ஜி. மிஷன் சாலையில் சொந்தமாக வீடு மற்றும் காலியிடம் ஒன்று உள்ளது.இந்த வீடு யாரும் தங்க முடியாத அளவுக்கு இடியும் நிலையில் இருப்பதால்  மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க வீட்டின் வாசலில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் அந்த வீட்டை ஆய்வு செய்த மாநராட்சி அதிகாரிகள் வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அது பொதுமக்களுக்கும் பள்ளி அருகில் உள்ளதால்  குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறி அந்த வீட்டில் தங்கியிருந்த மனோகர் மற்றும் வீட்டின் உரிமையாளர் சசிகலாவிற்கு மதுரை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

அந்த நோட்டிஸில் இந்த தகவல் கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் வீட்டை இடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது .இந்நிலையில் இன்னும் வீடு இடிக்கப்படாததால் அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் இந்த வீடு மிகவும் பழுதடைந்து உள்ளதால் யாரும் உட்புறம் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை நோட்டீசை வீட்டு வாசலில் ஒட்டிவிட்டு சென்றுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube