சிறையில் இருந்த சசிகாலா வெளியே சென்றது உண்மைதான்! விசாரணை குழு பரபரப்பு அறிக்கை!

சொத்துகுவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிற்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு, பெங்களூரு நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதனால் பெங்களூரு அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, கருணாகரன் ஆகியோர் சிறையில் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் இருந்த சசிகலா வெளியே சென்று ஷாப்பிங் செய்வது போல வீடியோ ஒன்று வெளியானது. மேலும் சிறை துறை அதிகாரி ரூபா இது குறித்து புகார் கூறினார். மேலும், சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டதாகவும் அதில் ஒரு அறையில் சசிகலாவிற்க்காக உணவு தயாரிக்கப்பட்டது எனவும் கூறப்பட்டது.
இந்த புகாரை அடுத்து, கர்நாடக அரசு, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வினய் குமார் தலைமையில் ஒரு விசாரணை குழு அமைத்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை குழு தற்போது அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், சசிகலா சிறையில் இருக்கும்போது வெளியே போனது உண்மைதான் என கூறப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.