87 வயதிலும் கிரிக்கெட் மீது தீராத காதல்...காலமானார் சாருலதா....பிசிசிஜ இரங்கல்

87 வயதிலும் கிரிக்கெட் மீது தீராத காதல்...காலமானார் சாருலதா....பிசிசிஜ இரங்கல்

  • 87 வயதிலும்  கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்ட  சாருலதா படேல் காலமானார்.
  • ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்  என்று பிசிசிஜ இரங்கல் தெரிவித்துள்ளது.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 87 வயது பாட்டி சாருலதா படேல்.லண்டனில் தற்போது வசித்து வருகிறார்.கிரிக்கெட்டின் மீது தீவிர காதல் கொண்ட இவர் இந்திய கிரிக்கெட் அணியை மிகவும் நேசித்தார். இதனை வெளிப்படுத்தும் விதமாக இங்கிலாந்தில் இந்திய அணி கலந்து கொள்கின்ற அனைத்து போட்டிகளையும் கண்டு ரசித்தார். இந்நிலையில் இந்திய அணியின் தீவிர ரசிகையான சாருலதா படேல் காலமானார்.
சாருலதா படேலின் மறைவுக்கு  பிசிசிஐ   தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி குறிப்பில் இந்திய அணியின் சிறந்த ரசிகையான சாருலதா படேல் ஜி எப்போதும் நம் இதயத்தில் நிலைத்து இருப்பார், விளையாட்டின் மீதான அவருடைய ஆர்வம் நம்மை ஊக்குவிக்கும். மேலும் அவரின் ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என்று கூறி இரங்கல் தெரிவித்துள்ளது.
Image
சாருலதா படேல் அவ்வளவு சாதராண ரசிகை கிடையாது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வங்கதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறிய போட்டியை உற்சாகமாக கண்டுகளித்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவராக 87 வயதில் வீல்சேரிலே மைதானத்திற்கு வந்து Image ‘தம்’ கட்டி ஊதுகுழலை ஊதியபடி, முகத்தில் மூவர்ண நிறத்தை தீட்டி கையில் தேசிய கொடியுடன் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் ரன் அடிக்கும் போதும், விக்கெட்டை வீழ்த்திய போதும் சாருலாதா கொண்டாடிய விதம் சக ரசிகர்களை மட்டுமின்றி இந்திய வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது.அப்போது  சமூக  வலைதளங்களில் சாருலாதா படேலின் புகைப்படம் அதிகம் பகிரப்பட்டன. Image மூச்சு விட தடுமாறும் வயதில் தம் கட்டி தன் கிரிக்கெட்டின் மீது வைத்த அதீத காதலை அவர் வெளிப்படுத்திய கண்டு ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய கேப்டன் விராட் கோலியும், துணை கேப்டன் ரோகித் சர்மாவும் சாருலதா படேலை சந்தித்து ஆசி பெற்றனர். Image   அப்போது மூதாட்டி, அவர்களுக்கு முத்தமிட்டு தனது ஆசி கலந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/BCCI/status/1217685375872684032