அஜித் பட இயக்குனர் இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்..!

தமிழகத்தில சரவணா ஸ்டோர்ஸ் முக்கிய நகரங்களில் இயங்கி வருகிறது.சரவணா ஸ்டோர்ஸ்

By murugan | Published: Dec 01, 2019 02:50 PM

தமிழகத்தில சரவணா ஸ்டோர்ஸ் முக்கிய நகரங்களில் இயங்கி வருகிறது.சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் இந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான அருள் நடித்து வருகிறார். இவரின் நடிப்பிற்கு பல விமர்சனங்கள் எழுந்தாலும் , அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் நடித்து வருகிறார். ஒரு மாதத்திற்கு முன்பாக இவர் சினிமாவில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் அருள் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த துவக்க விழாவில் நடிகர் பிரபு , விவேக் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அருள் நடிக்கும் இப்படத்தை ஜோடி- ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்குகின்றனர். இவர்கள் அஜித் ,விக்ரம் நடித்த "உல்லாசம் "  , "விசில் " போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். ஆண்டனி படத்தொகுப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் முன்னணி நடிகைகளிடம் கதாநாயகி நடிக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதில் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது வட இந்திய மாடல் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.இப்படத்தை சரவணா ஸ்டோர்ஸ் அருள் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc