தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சரத்குமார்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

By venu | Published: Sep 20, 2019 09:30 AM

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தெலுங்கானாவின் ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை நியமனம் செய்யப்பட்டார்.கடந்த 8-ஆம் தேதி ஆளுநராக பதவி ஏற்றார் தமிழிசை.பதவி ஏற்ற முதல் நாளே 6 புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து  ஆளுநராக பதவியேற்றத்தை தொடர்ந்து அவருக்கு பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்  ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.ஆளுநர் தமிழிசைக்கு பூங்கொத்து, கொடுத்து தனது வாழ்த்துகளை  தெரிவித்தார் சரத்குமார் . சரத்குமாரின் மனைவி ராதிகாவும் உடனிருந்தனார்
Step2: Place in ads Display sections

unicc