சானியா மிர்சா கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து விலகல்.!

சானியா மிர்சா கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து விலகல்.!

  • சானியா மிர்சா ,இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாட இருந்த கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து விலகினார்.
  • ஆனால் ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாட திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் வலது பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து விலகுவதாக சானியா மிர்சா அறிவித்தார். ஆனால் ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடுவதால் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு தொடர்ந்து போட்டியில் விளையாட முடியாமல் போக வாய்ப்பு இருப்பதால் ஏதாவது ஒரு போட்டியில் விளையாட முடிவு எடுத்துள்ளதாக சானியா மிர்சா கூறியுள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில் உக்ரைனின் நாடியா கிச்செனோக்குடன் இன்று  களம் காண உள்ளார்.சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் உக்ரேன் வீராங்கனை  நாடியாஉடன் சேர்ந்து  6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று சானியா - நாடியாஜோடி கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!
மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..?
கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்....
மின்தடையால் திருப்பூர் மருத்துவமனையில் பறிபோன உயிர் - ஆட்சியர் விளக்கம்!
போக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் தொடக்கம்.!
#IPL2020:ஆல்ரவுண்டர் மிட்செல்-மார்ஷ்க்கு காயம்! விளையாடுவது சந்தேகம்!!
#IPL2020:வாய்ப்பு கிடைத்தால் ரஸ்செல்லுக்கு தோள்கொடுக்க ஆசை!மோர்கன் மாஸ்!
வானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி...
அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
பெண்களிடம் திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை!