பிக்பாஸ் மேடையில் வெறித்தனம் பாடலுக்கு நடனமாடிய சாண்டி! வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் பிரமாண்டமாக

By Fahad | Published: Apr 02 2020 05:51 PM

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் முகன், சண்டி, லொஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். இந்த நிகழ்ச்சியின் இறுதியில், முகன் அவர்கள் தான் பிக்பாஸ் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கு அடுத்த இடத்தை சாண்டி மாஸ்டர் பிடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், மேடையில் வைத்து தளபதி விஜயின்  பாடலை முகன் பாட, சாண்டி நடனமாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,