சாம்சங் நிறுவனம்  முதலீட்டாளர்களுக்கு இனிய செய்தி!

சாம்சங் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 50க்கு ஒன்று என்ற விகிதத்தில் கூடுதலாக பங்குகளை வழங்க முடிவு செய்துள்ளது.
எலெக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான சாம்சங், டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் 14 பில்லியன் டாலர் லாபத்தை ஈட்டியுள்ளது.
குறிப்பாக மெமரி சிப்ஸ் தயாரிப்பில் அதிகளவு லாபம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சாம்சங் நிறுவனத்தின் முதலீட்டாளர்களின் மதிப்புகளை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க அந்நிறுவனம் முடிவெடித்துள்ளது. இந்த அறிவிப்பால் சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் பங்குகள் உச்சத்தை அடைந்துள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment