அம்மாவுக்கு தரை துடைத்து உதவும் சமீரா பேபி.! 

சமீராவின் இரண்டாவது பெண் குழந்தையான நயரா என்ற கியூட்டியின் மாஸ் வீடியோ

By bala | Published: May 18, 2020 07:28 PM

சமீராவின் இரண்டாவது பெண் குழந்தையான நயரா என்ற கியூட்டியின் மாஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மே 31 வரை நான்காம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலை நிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் பல சினிமா நட்சத்திரங்களும், பிரபலங்களும் ஜாலியான வீடியோக்களையும், பழைய புகைப்படங்களையும், சிலர் டிரெண்டாங்கில் உள்ள சேலன்ஜ்களை செய்தும் , ஒரு சிலர் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை சமீரா ரெட்டி தினமும் தனது இரண்டு குழந்தைகளுடன் அழகான வீடியோவை வெளியிடுபவர் , தற்போது  சமீராவின் இரண்டாவது பெண் குழந்தையான நயரா என்ற கியூட்டியின் மாஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நயரா தண்ணீரை குடித்து விட்டு அதை அந்த தண்ணீரை வாயிலிருந்து கீழே விட்டு தரையை துடைத்து அம்மாவுக்கு உதவுகிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 

Step2: Place in ads Display sections

unicc