பக்தனுக்காக 21 நாள் பச்சை பட்டிணி விரதம்..இன்று நிறைவு செய்யும் அன்னை

பக்தனுக்காக இப்பூவுலகில் அன்னையே 21 நாட்கள் பச்சை பட்டிணி இருக்கும் அற்புத நிகழ்வானது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுத்தோறும் அன்னையுடன், பக்தர்களும் இவ்விரத்தை மேற்கொள்வது வழக்கம்.

சமயபுரம் சுயம்பு மாரியம்மன் கோவில்  கடந்த மார்ச்.,8ந்தேதி அன்று பச்சை பட்டிணி விரதத்தை தொடங்கிய விரதம் 21 நாட்கள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.விரதம் முடிந்தவுடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று சித்திரை திருவிழா நடைபெறும.ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் அம்மனுடன் பக்தர்களும் இவ்விரத்தை மேற்கொள்வர் அவ்வாறு விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தங்கள் வீடுகளிலேயே அன்னையின் புகைப்படத்தை வைத்து  நீர்,பானகம்,மோர்,தயிர் சாதம் , இளநீர், கஞ்சி, ஆகியவற்றை படைத்து மாலை மற்றும் காப்புகளை கழற்றி இவ்விரதத்தை காலை 6.00 மணி முதல் 8.00 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
kavitha