சமந்தாவின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு தயார்

  • நடிகை சமந்தா தற்போது “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.சூப்பர் டீலக்ஸ் படம் வரும் மார்ச் 29ம் தேதி வெளியாகவுள்ளது.அதற்கு பிறகு இவர் தற்போது  தெலுங்கில் “மஜிலி” படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
  • இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 5ம் தேதி வெளியாவுள்ளது.இவர் நடிப்பில் ஓ பேபி சக்ககுன்னவே படத்திலும் நடிகை சமந்தா நடித்து வருகிறார். இந்த படம் மே மாதம் வெளியாகவுள்ளது.

 

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக திகழ்கிறார்.இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படத்தில் நடிகை சமந்தாவின் கதாபாத்திரம்  இருப்பதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியின் போது நடிகை சமந்தா கூறியிருந்தார்.இப்படத்தில் வேம்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.சூப்பர் டீலக்ஸ் படம் வரும் மார்ச் 29ம் தேதி வெளியாகவுள்ளது.

அதற்கு பிறகு இவர் தற்போது  தெலுங்கில் “மஜிலி” படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.இந்த படத்தில் இவர் இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக அவரது கணவர் நாகசைதன்யா நடித்து வருகிறார்.இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 5ம் தேதி வெளியாவுள்ளது.

இதை அடுத்து  இவர் நடிப்பில் ஓ பேபி சக்ககுன்னவே படத்திலும் நடிகை சமந்தா நடித்து வருகிறார்.”ஓ பேபி சக்ககுன்னவே’ படம் கொரிய மொழியில் வெளியான “மிஸ் கிராணி”என்ற  படத்தின் ரீ-மேக்காகும். இந்த படம் மே மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமந்தவின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருப்பதை  அடுத்து தற்போது அந்த படங்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment