வில்லியாக களமிறங்கும் சமந்தா!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை சமந்தா, மனோஜ் பாஜ்பாய் நடித்த ‘எ பேமிலி மேன்’ என்ற இணைய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தொடரின் முதல் பாகம் சமீபத்தில் வெளியான நிலையில், இதன் இரண்டாவது சீசனில் நடிகை சமந்தா நடிக்கவுள்ளாராம். இதில் இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.