சமந்தாவிற்கு எப்போது குழந்தை பிறக்கப்போகிறது? அவரே கூறிய அதிரடி பதில்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா.

By manikandan | Published: Nov 21, 2019 08:40 AM

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. அவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. இருவரும் அவர்களது சினிமா துறையில் முழு கவனம் செலுத்தி நடித்து வருகின்றனர். தற்போதும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகியாக சமந்தா வலம் வருகிறார். இந்நிலையில் இவர் அண்மையில் ரசிகர்களிடம் இணையத்தில் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது எப்போது குழந்தை பெற்றுகொள்ள போகிறீர்கள்? என கேள்வி கேட்டார். அதற்கு நடிகை சமந்தா 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி காலை 7 மணிக்கு நான் குழந்தை பெற்றுக் கொள்வேன். என அதிரடியாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
Step2: Place in ads Display sections

unicc