அதிதி ராவ் மீது அளவற்ற கோபத்தில் சமந்தா! காரணம் இதுதானா?

அதிதி ராவ் மீது அளவற்ற கோபத்தில் இருக்கும் சமந்தா. நடிகை சமந்தா தமிழ்

By Fahad | Published: Apr 05 2020 09:54 AM

அதிதி ராவ் மீது அளவற்ற கோபத்தில் இருக்கும் சமந்தா. நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாக உள்ள மகா சமுத்திரம் என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் சர்வானந்ததிற்கு  ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருந்தார். இப்படம் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது . இதனையடுத்து இந்த படத்தில் சமந்தாவை நீக்கிவிட்டு தற்போது அவருக்கு பதிலாக அதிதி ராவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். ஏற்கனவே இந்த படத்திற்காக அதிதி ராவிடம் பேசப்பட்ட நிலையில், அவர் சமீபத்தில் தான் சம்மதம் சொன்னாராம். அதனால் கடைசி நிமிடத்தில் சமந்தாவை நீக்கிவிட்டு அதிதி ராவ் ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்படத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருந்த சமந்தாவிற்கு இப்படி ஒரு நிலை நேரிட்டது வருத்தமாக இருந்தாலும், அதிதி ராவின் மீது அளவற்ற கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Posts