உலகின் சிறந்த விக்கெட்கீப்பர் சாஹா தான் – விராட் கோலி..!

உலகின் சிறந்த விக்கெட்கீப்பர் சாஹா தான் – விராட் கோலி..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக வலம் வந்தவர் தோனி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு தனது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் விக்கெட் கீப்பருக்கு சிக்கல் ஏற்பட்டது.அப்போது  டோனியை தொடர்ந்து டெஸ்ட் போட்டிக்கு  சாஹா களமிங்கினர். சஹாவிற்கு  தொடர்ந்து ஏற்பட்ட காயம் காரணமாக அப்போது எல்லாம்  அவருக்கு பதிலாக பார்த்திவ் பட்டேல் இறங்கினார்.
பின்னர் இந்திய அணிக்கு புதிய விக்கெட் கீப்பராக ரிஷாப் பண்ட் கிடைத்தார். காயம் காரணமாக சாஹா ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டு ரிஷாப் பண்ட்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய பண்ட் பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
சாஹா காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகும் பண்ட்க்கு  வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பண்ட் , சாஹா  இருவரும் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றன. ஆனால் அதில் இரண்டு போட்டியில் லெவன் அணியில் சாஹா விற்கு  வாய்ப்பு கிடைக்கவில்லை.
தொடர்ந்து பண்ட்  சொதப்பினார். இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பண்ட்க்கு பதிலாக சாஹாவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சாஹா 22 மாதங்களுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறார்.
இதுகுறித்து கேப்டன் கோலி கூறுகையில், தற்போது சாஹா நல்ல உடல் தகுதியுடன் உள்ளார். இந்த தொடரில் விளையாட இருக்கிறார். சாஹா விக்கெட் கீப்பிங்கை அனைவரும் பார்க்க வேண்டும். தொடர் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தது அவரது துரதிர்ஷ்டம். என்னை பொறுத்தவரை இதுதான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் எனக் கூறினார்.
இந்திய அணியில் தற்போது மூன்று வகையான போட்டிக்கும் மூன்று கீப்பர்கள் உள்ளன. டெஸ்ட் போட்டிக்கு சாஹா , டி 20 போட்டிக்கு பண்ட் , ஒருநாள் போட்டிக்கு தோனி உள்ளனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube